Adirai pirai
islam தமிழகம்

பெரியகுளம் மதர்ஷா மீது திட்டமிட்டு அவதூறு பரப்பி சிக்கிக்கொண்ட ஊடகங்கள்!

பெரியகுளம் தென்கரை பாரதிநகர் பகுதியில் மதரஸா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மதர்ஷாவில் மாணவைகள் கொடுமைபடுத்தப்படுவதாக தந்தி டிவி, பாலிமர் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியானது. உடனே காவிகள் பலர் மதர்ஷா நிர்வாகத்தை கண்டித்து சம்யுக வலைதளங்களில் பல்வேறு அவதூறுகளை பரப்ப தொடங்கினர்.

இந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் மதராஸா மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். இந்த மதராஸாவில் கொடுமை படுத்துகிறார்களா என்று கேட்டவுடன் உடனே மாணவிகள் நாங்கள் இங்கே நிம்மதியாக இருக்கிறோம். எங்களை எங்கள் குடும்பத்தை காட்டிலும் மிகவும் அன்பாக எங்களை கவனித்து கொள்கிறார்கள். ஒடி போன பிள்ளைகளுக்கு இங்கே ஏதும் கொடுமை நடத்துள்ளாதா? என்று கேட்டவுடன், மதராஸா மாணவிகள் அப்படி ஏதுவும் நடக்கவில்லை, அந்த இரண்டு மாணவிகள் பொய் சொல்லுகிறார்கள், அவர்களின் சுயநலத்திற்க்காக மதராஸா விட்டு போய்யுள்ளார்கள் என்று மதராஸா மாணவிகள் காவல்துறையிடம் கூறியுள்ளார்கள்.

நடந்து என்ன என்பதை விசாரித்து பத்திரிக்கையாளர் சொன்ன உண்மை வெளிப்படுத்தாமல் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் நச்சு கருத்துக்களை விதைக்கும் வகையில் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கடந்தமாதம் பாலேஸ்வரம் கிருஸ்தவ கருணை இல்லத்தின் மீது இது போன்று காவிகளின் வேண்டுகோளின் படி அவதூறு பரப்பிய ஊடகங்களின் இந்த செயல் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபாண்மையின மக்களிடையே ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.