Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

மோடி வருகைக்கு அதிரையில் திமுக வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு!

சென்னை அருகே திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். மேலும் அடையார் புற்றுநோய் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். இதையொட்டி சென்னையில் ஐந்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் கமாண்டோ‌ படையினர் மற்றும் அதிரடி படையினரும் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னை விமான நிலையத்தில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றத். பிரதமர் வரும் நாள், தமிழ்நாட்டுக்கு துக்க நாள் என்று இந்தியாவுக்கே தெரிவிக்கும் வகையில், இன்று காலை முதல் மாலை வரை எல்லோர் வீட்டிலும் கறுப்பு கொடியேற்ற எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். எனவே அதிரையில் திமுக அனைவரும் மோடிக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்தும், வீடுகளில் கொடியேற்றியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.