அதிரையை எட்டிப்பார்த்த குட்டி மழை!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிரையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கு நம்மவர்கள் தயங்குகின்றனர். இந்த சூழலில் அதிரையின் சுற்றுவட்டார பகுதிகளான மதுக்கூர், முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. ஆனால் அதிரையில் மட்டும் அதற்கான எந்த தடங்களும் தென்படவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அதிரையில் 10 நிமிடங்கள் மழை பெய்து ஓய்ந்தது. இந்த மழை தொடர்ந்து நீடித்தால் ஊரில் நிலவும் வெப்பம் தணியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Close