FLASH NEWS: அதிரை அரசுப்பேருந்தில் போலி டிக்கெட்டுகள், கண்டக்டரை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்!

அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் B18 என்ற அரசுப்பேருந்தில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த பேருந்தின் நடத்துனர் அதிரையிலிருந்து செல்லும் பயணிகளுக்கு பட்டுக்கோட்டையிலிருந்து செல்வது போன்றும், பட்டுக்கோட்டையில் இருந்து செல்பவர்களுக்கு அதிரையிலிருந்து செல்வது போன்றும் டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு, பின்னர் பயணிகள் இறங்கும் போது கொடுத்த டிக்கெட்டுகள் மீண்டும் பெற்றுக்கொண்டு வேறு பயணிகளிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளார். இதன் மூலம் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் அவர் பணம் மோசடி செய்துள்ளார். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து அதிரை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த B18 அரசுப்பேருந்து நடத்துனரிடம் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் மீண்டும் பயன்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு.

Close