Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சுகாதாரம் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் ஆணை

அதிரையில் திடக்கழிவு மேலாண்மையை பராமரிக்கும் வகையில் விசாலமான குப்பை கிடங்கு அமைக்க அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4 இன் சார்பாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த மனுவை வாசித்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அதிரையில் சுகாதாரம் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆணையிட்டு சுற்றுசூழல் மன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.