அதிரை கடற்கரைத் தெருவில் எம்எல்ஏ சி.வி.சேகர் நேரில் ஆய்வு!

அதிரை கடற்கரைத் தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நமது அதிரை பிறையில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறோம். ஆனால் இதற்கு பேரூராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அதிரை கடற்கரை தெரு முஹல்லா வாசிகள், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தை அடுத்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீண்டும் அதிரை பேரூராட்சியில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் அமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் 2-வது முறையாக நடைபெற்றது.

இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சிவி.சேகரை நேரில் சென்று சந்தித்த தீனுல் இஸ்லாம் அமைப்பினர் தேவையை நிறைவேற்றக்கோரி மனு வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ கடற்கரைத்தெருவில் நேரில் ஆய்வு செய்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் அடைப்படையில் இன்று அதிரை கடற்கரைத்தெருவுக்கு வந்த எம்.எல்.ஏ அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகளை நேரில் பார்வையிட்டார். இதையடுத்து அவற்றை படிபட்யாக சரி செய்து தருவதாக அவர் உறுதியளித்தார்.

Close