ஆஷிபாவை சிதைத்த மதவெறி பாஜகவினரை கண்டித்து அதிரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

ஜம்மு-காஷ்மீரில், ஜனவரி 10-ம் தேதியன்று 8 வயது சிறுமி ஆஷிஃபாவை ஒரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, நான்கு போலீஸ்காரர்கள், 18 வயதுக்குக் கீழ் உள்ள ஒரு சிறுவன் உள்ளிட்ட எட்டு காவிகள் சேர்ந்து கடத்திச் சென்று, கோவிலில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்தனர். இந்தக் கொடுமையைக் கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக-மமக சார்பில் அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிரையர்கள், மாற்றுமத சகோதரர்கள், சிறுவர், சிறுமிகள் பதாகைகளை ஏந்தி ஆஷிபாவின் மரணத்திற்கு நீதி கேட்டனர். இதற்கு காரணமான மதவெறி பிடித்த பாஜக அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக அதிரை தக்வா பள்ளி முக்கத்திலிருந்து பேருந்து நிலையம் வரை பேரணியாக நடந்து வந்து தமுமுக வினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Close