Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட தொடரில் AYFA அபார வெற்றி!

அதிரை யங்ஸ்டர்ஸ் கால்பந்து கழகம் நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கால்பந்தாட்ட தொடர் போட்டி, கடற்கரைத்தெரு கால்பந்தாட்ட மைதானத்தில் கடந்த 13-4-2018 அன்று தொடங்கி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் அதிரை AYFA மற்றும் AFFA அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.

இன்று மாலை பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் AFFA அணி 1 கோலையும் AYFA அணி 3 கோல்களையும் விளாசின. இதன் மூலம் 2 கோல்கள் வித்தியாசத்தில் அதிரை AYFA அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் முதல்பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.7 ஆயிரமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அதிரை AYFA அணியின் இளம் வீரர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.