Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பைத்துல்மால் திருக்குரான் மாநாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்க ரியாத் கிளை கூட்டத்தில் முடிவு!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 56 வது மாதாந்திர கூட்டம் ஹாராவில் இனிதே நடைபெற்றது.

( அல்ஹம்துலில்லாஹ் )

நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                 : சகோ. அகமது அஸ்ரப் ( துணை தலைவர் )

முன்னிலை        : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

வரவேற்புரை         : சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை     : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:

1) இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் மாதம் மெகா கூட்டமும் 5-ம் வருட இஃப்தார் நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடுகள் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொறுப்புதாரிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

2) அல்லாஹ்வின் கிருபையால் வரும் ரமலான் பிறை 3-அன்று (18/05/2018) வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணியளவில் வழமை போல் பத்தாவில் உள்ள கிளாசிக் ஆடிட்டோரியத்தில்இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அதிரை அணைத்து முஹல்லா வாசிகள் அனைவர்களும் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

.

3) அடுத்தமாதம் மெகா கூட்ட்டத்திற்கான சிறுவர்களின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவமாக அமைவதால் தங்கு தடையின்றி தங்களின் குழந்தைகளின் பெயர்களை பொறுப்புதாரியான சகோ.சேக் மன்சூர் (MOB:0548880956) அவர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் வரும் மே மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் நமதூரில் பைத்துல்மால் சார்பில் நடைபெற இருக்கும் 15-வது குர்ஆன் மாநாடு மற்றும் ABM-ன் 25-வது வெள்ளிவிழா மற்றும் வெள்ளிமலர் வெளியீடு சிறப்பாக நடைபெற அதிரை அணைத்து ஜமாத்தினர்களின் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ID CARD விஷயமாக விடுபட்ட உறுப்பினர்களின் புகைப்படம் மற்றும் ADDRESS விவரங்களை இன்னும் ஒரு வாரத்தில் சகோ.அப்துல் மாலிக் அவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு நினைவூட்டப்பட்டது.