Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் ATM களில் பணம் இல்லையா?… இத முயற்சி பன்னுங்க!

அதிரையில் முக்கிய வங்கிகளான இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா ஆகிய வங்கிகளின் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவசரமாக பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் ஒவ்வொரு வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் எடுக்க அலைந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

அதிரையில் பெரும்பாலான நேரங்களில் இந்த பிரச்சனை நிலவுவதாகவும் இதனால் தாங்கள் கடும் சிரமத்திற்க்குள்ளாவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறினர். இப்படி பணம் எடுக்க முடியாத அதிரையர்கள் அதிரை முத்துப்பேட்டை செல்லும் ஈசிஆர் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கு அருகாமையில் உள்ள இண்டிகேஷ் ATM மையத்திற்கு செல்லலாம். பெரும்பாலான நேரங்களில் இந்த ATM இல் பணம் கிடைக்கிறது. அத்துடன் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் பிடித்தம் செய்யப்படுவது இல்லை. முயற்சியுங்கள்.

பொதுநலன் கருதி…

அதிரை பிறை