Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா? இதோ பாருங்க…

அதிராம்பட்டினம் தரகர் தெருவில் பள்ளிவாசல் அருகில் மற்றும் பள்ளிவாசலில் இருந்து விலைக்கார தெரு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இதில் கிடக்கும் 80% பிளாஸ்ட்டிக் பைகளை கால்நடைகள் உண்ணும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகளால் அந்த பகுதில் செல்ல முடியாத அளவிற்க்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் தொற்று நோய் கிருமிகள் ஏற்படுகின்றன. இதனை பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றன.

தகவல்: மன்சூர், ரோட்டரி சங்க பொருளாளர்