பத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்!

வீடியோவை காண…

https://youtu.be/JPy6FXbmXUM

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுவை சேர்ந்தவர் ஃபாஜல் ரஹ்மான். 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி கொண்டு போய் சேர்க்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களிடமும் மாதம் 1 ரூபாய் வீதம் வசூலித்து அதில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவலாம் என இவர் விளக்கியுள்ளார். இதனை கேள்விப்பட்ட பிரதமர் மோடி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் இவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.

தன்னுடைய 11 ஆம் வகுப்பிலேயே இவ்வளவு அருமையான திட்டத்தை வகுத்த பாஜல் ரஹ்மானை பாராட்டி குடியரசு தலைவரால் இவருக்கு நாட்டி உயரிய விருதான பத்ம ஶ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த இவருக்கு ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிரையை சேர்ந்த ராஃபியா அவர்களின் முயற்சியில் ஜித்தா தமிழ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இவர் நேற்று மக்காவுக்கு உம்ரா செல்ல புறப்பட்டார். இது குறித்து அவர் பேசிய வீடியோவை காண்போம்.

இவர் குறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறப்பு செய்தித்தொகுப்பு…

டாக்டர்.அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் புதிய திட்டத்தை வகுத்துள்ள தமிழகத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவன் ஃபஜல் ரஹ்மானை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டி அந்த திட்டம் குறித்து கேட்டறிந்துள்ளார்.இது குறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் வெளியான சிறப்பு செய்தித்தொகுப்பு…

تم النشر بواسطة ‏‎Noorul Ibn Jahaber Ali‎‏ في 12 نوفمبر، 2017

Close