அதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை!

அதிரையில் தற்பொழுது நாய் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள்  சாலையில் செல்வதற்க்கு அச்சம் அடைந்துள்ளனர். உச்சக்கட்டமாக அதிரை சி.எம்.பி லேன் பகுதிகளில் நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த பகுதயை ஒருவர் கடந்து சென்று அதை ஒரு தெரு நாய் பார்த்தால் அவர் பைக்கில் சென்றால் கூட அவரை விரட்டி படாதபாடு படுத்திவிடுகிறது. இரவு நேரங்களில் இதன் தொல்லை மிக அதிகம். கடந்த ஆண்டு இப்பகுதியில் சிறுவனை நாய்கடித்தது பலருக்கும் நினைவிருக்கும். ஆனால் இது வரை நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வேதனை.

இதே போல் அதிரை பேருந்து நிலையம், சுரைக்காய் கொல்லை, கடற்கரை தெரு, சானாவயல், பழஞ்செட்டித் தெரு, கரையூர் தெரு, ஸிபா மருத்துவமனை அருகில் உள்ள காலனி ஆகிய பகுதிகளில் இந்த தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. அதிரையில் தொடர்ந்து நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் பேரூராட்சி தரப்பில் இது குறித்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Close