Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்!

அதிராம்பட்டினம் தரகர் தெருவில் பள்ளிவாசல் அருகில் மற்றும் பள்ளிவாசலில் இருந்து விலைக்கார தெரு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையில் குப்பைகள் சிதறி கிடப்பதாகவும், இதில் கிடக்கும் 80% பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்ணும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த குப்பைகளால் அந்த பகுதில் செல்ல முடியாத அளவிற்க்கு துர்நாற்றம் வீசுவதுடன் இதன் மூலம் தொற்று நோய் கிருமிகள் ஏற்படுவதாக அதிரை ரோட்டரி சங்க பொருளாளர் மன்சூர் அளித்த தகவலின் படி இன்று காலை நமது அதிரை பிறையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இந்த பதிவு பேரூராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் இப்பகுதியில் பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் இந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்களின் சார்பாக அதிரை பிறை நன்றி தெரிவித்து கொள்கிறது.