Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்!

அதிரை A.J.ஜும்மா பள்ளி அருகே, பழனியப்பா சைக்கிள் மார்ட் பின்புறமாக உள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியை பல நாட்களாக பேரூராட்சி துப்புரவு செய்யாததால், இங்கு கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள், ப்ளாஸ்டிக் பைகள் சிக்கிக்கொள்கின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி வருகிறது. குப்பைகளாலும் கழிவு நீர் தேக்கத்தாலும் இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குப்பைகள் மற்றும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் கொடிய நோய்கள் மக்களை தாக்கும் அச்சுறுத்தல் உள்ளது. சொல்லப்போனால், இப்பகுதி அதிரையின் அறிவிக்கப்படாத திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையமாக செயல்பட்டு வருகிறது எனலாம். இதனை அதிரை பேரூராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிரை பிறை சார்பாக வகியுறுத்துகிறோம்.