அதிரையர்களே! காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…

ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து காவிகளால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அதிரையில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஜும்மாக்களுக்கு பிறகு ஆஷிபாவுக்கு நீதிகேட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பலர் கையெழுத்தினர். இதற்கு மேலும் வலுசேர்க்க நீங்கள் விரும்பினால் இந்த கீழ்காணும் படங்கள் பிரிண்ட் எடுத்து உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கையெழுத்து பெற்று உங்கள் முஹல்லா நிர்வாகிகளிடம் வழங்கலாம்.

Close