Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

ஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து காவிகளால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை கொலை செய்தனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே TNTJ வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.