முஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை!

அபிஷேக் மிஸ்ரா என்பவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இவர், தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ‘நான் மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற அணிக்கான விருதை பெற்றவர். இவர்  ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘ஓட்டுநர் முஸ்லீம் என்பதால், ‘ஓலாகேப்’ஐ ரத்து செய்துவிட்டேன். நான் எனது பணத்தை ஜிகாதி மக்களுக்கு தரமாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம், லக்னோவில் உள்ள பட்ளர் காலணியில் இருந்து, பாலிடெக்னிக் பேருந்து நிலையம் வரை செல்வதற்கு அவர் அந்த காரை முன்பதிவு செய்துள்ளார். பின்னர் ஓட்டுநர் இஸ்லாமியர் என்பதை அறிந்து, காரை ரத்து செய்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Close