உ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா?

உத்தரபிரதேசம் மாநிலம் கோராக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சுமார் 90 குழந்தைகள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான் தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலின்டர்களை வாங்கிக்கொடுத்து பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார். ஆனால், உபியில் பதவி வகிக்கும் யோகியின் பாஜக அரசு தங்கள் மீதுள்ள குற்றங்களை மறைக்க, கபீல் கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

தற்போது வரைன 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் சிறை நிர்வாகம் மெத்தனமாக இருந்துள்ளது. இது குறித்து அவரது மனைவி ஷபிஸ்தான் கான் 2 நாட்களுக்கு முன்பு மீடியாக்களிடம் தெரிவித்தார். அப்போது, லக்னோ மருத்துமனைக்கு அவரை டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால், சிறை நிர்வாகம் இதை செய்ய மறுத்து வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார். இந்த செய்தி சில மீடியாக்களில் வெளிவந்தது. இதையடுத்து நெஞ்சு வலியான் அவதிப்பட்ட கபீல் கானை சிறைத் துறையினர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இன்று அழைத்து வந்தனர்.

Close