தமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுவை சேர்ந்தவர் ஃபாஜல் ரஹ்மான். 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி கொண்டு போய் சேர்க்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களிடமும் மாதம் 1 ரூபாய் வீதம் வசூலித்து அதில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவலாம் என இவர் விளக்கியுள்ளார்.

இதனை கேள்விப்பட்ட பிரதமர் மோடி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் இவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.

தன்னுடைய 11 ஆம் வகுப்பிலேயே இவ்வளவு அருமையான திட்டத்தை வகுத்த பாஜல் ரஹ்மானை பாராட்டி குடியரசு தலைவரால் இவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம ஶ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜித்தா தமிழ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இவர் மக்காவுக்கு உம்ரா சென்றார். இதனிடையே ஜித்தாவில் இவருக்கு தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட இந்திய தூதரக அதிகாரி மற்றும் இந்தியா பன்னாட்டு பள்ளி முதல்வர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் மாணவனின் திட்டத்தை கேட்டறிந்து மனதார பாராட்டினர்.

Close