தஞ்சையில் அதிரை திமுக வினர் மனித சங்கிலி போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காலதாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் இன்று பிற்பகலில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. தஞ்சையில் வைகோ தலைமையில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிரையை சேர்ந்த திமுக வினர் நகர் தலைவர் குணசேகரன் தலைமையில் கலந்துகொண்டனர்.

Close