Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்!

தஞ்சாவூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் டிடிவி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடுமையான வெயில் காரணமாக 6 மணிக்குத்தான் ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கோட்டை அமீர் அபூபக்கர் மற்றும் பலர் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.