Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

நோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி!

அதிரையை நாம் சுற்றமாக வைத்து கொள்ள வேண்டும் வீணாக தண்ணீர் தேக்கி வைக்க கூடாது, டயர், பிளாஸ்டிக் வாளிகளில் மழை நீர் தேங்க விடக்கூடாது என பேரூராட்சி நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நம் வரி பணத்தில் ஓரு சிலரை பணியில் அமர்த்தி விழிப்புணர்வு செய்வார்கள். டெங்கு, மலேரியா போன்ற நோய் வரும் காலங்களில் மட்டும்.

மக்களிடம் தூய்மையை எதிர்பார்க்கும் இவர்கள் தூய்மை பணிகளை முறையாக செய்கின்றார்களா?

பழஞ்செட்டி தெரு A.J.பள்ளி அருகே குப்பை கூண்டு பல நாட்களாக வழிந்து கிடக்கின்றது முறையாக பராமரிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முதலில் பேரூராட்சி நிர்வாகம் சரியாக செயல்பட்டால் தான் மக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்பதனை இந்த நிர்வாகம் புரிந்து நடக்க வேண்டும். இனியாவது விரைந்து செயல்படுமா இந்நிறுவாகம்.