Adirai pirai
உள்ளூர் செய்திகள்

BREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து!

https://youtu.be/QVKrgoYShLE

அதிரை கடைத்தெருவில் ஐஸ் பேக்டரிக்கு அடுத்துள்ள அன்வர் பந்தல் கொட்டகையில் இன்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. லேசாக உருவான தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவி கொளுந்து விட்டெரிய தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இளைஞர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தகவல் தெரிவித்து நீண்ட நேரம் கழித்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்ததால் மக்கள் ஆத்திரமடைந்தனர். இந்த தீ விபத்தில் பந்தல் கூரைகள், மூங்கில்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.