அதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்!

அதிரை கடைத்தெருவில் ஐஸ் பேக்டரிக்கு அருகே உள்ள அடுத்துள்ள அன்வர் பந்தல் கொட்டகையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. லேசாக உருவான தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவி கொளுந்து விட்டெரிய தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்தில் திரண்ட இளைஞர்கள் தீயணைப்பு வாகனத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தங்கள் இயன்ற வரை தண்ணீரை ஊற்றி இளைஞர்கள் போராடி தீயை கட்டுப்படுத்னர். இந்த தீ விபத்தில் பந்தல் கூரைகள், மூங்கில்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.

தகவல் தெரிவித்து நீண்ட நேரம் கழித்து தீ அணைந்த பிறகு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது. இதுவே ஒரு மணிநேரம் கழிந்து இந்தபகுதியில் தீ ஏற்பட்டிருந்தால் இவ்வளவு இளைஞர்கள் திரண்டிக்க முடியாது. தீயணைப்பு வாகனமும் வழக்கம் போல் தாமதாகவே வரும். பெரிய விபத்து ஏற்பட்டிருக்க கூடும். அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Close