Adirai pirai
உள்ளூர் செய்திகள்

நினைவூட்டல்: ஊரின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டுள்ள அதிரை மேம்பாட்டு சங்மத்தின் கூட்டம்!

அதிரையில் மக்களுக்கான அடிப்படை தேவைகளும், மேம்பாடுகளும் அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் இருந்தாலும் இந்த பிரச்சனைகளை களைவது இயலாத காரியமாக உள்ளது. எனவே அதிரை மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு அனைத்து தெருக்களின் ஒற்றுமையுடன் ஊரை முன்னேற்றும் வகையில் “அதிரை மேம்பாட்டுச் சங்கமம்” என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிமுக மற்றும் கொள்கை விளக்க நிகழச்சி சென்னை மண்ணடியில் உள்ள இந்தியன் பேலஸ் அரங்கில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சென்னை வாழ் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான 2வது ஆலோசனை கூட்டம், வரும் மே 1 ஆம் தேதி அதிரை ரிச் வே கார்டன் ரெஸ்டாரண்டில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு ஊரின் முன்னேற்றம் குறித்த தங்களின்கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.