Adirai pirai
Crime இந்தியா

அஜ்மீரில் உள்ள அனுமான் கோவிலில் 7 வயது சிறுமியை கற்பழித்த 48 வயது சாமியார்!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே கல்யானிபுரா மலைப்பகுதியில் அமைத்துள்ளது காலிசட் அனுமான் கோவில். இந்த கோவில் பணியாற்றி வரும் 48 வயதான சிவானந்த் என்ற சாமியார், 7 வயதான சிறுமியை கோவிலுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளான். சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை மகளை காணவில்லை என தேடிச்சென்ற போது சிறுமி மயக்கமுற்ற நிலையில் கோவிலின் இருட்டு அறையில் கிடந்துள்ளார். சிறுமி சுயநினைவுக்கு வந்த போது, சாமியாரின் கொடுமைகளை முழுமையாக கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கோவில் சாமியார் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவானந்த் சாமியார், கடந்த 10 ஆண்டுகளாக இந்த கோவிலில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே கோவிலுக்கு அனுமதியளிக்கும் சாமியார்கள், பெரும்பாலான இந்து மக்களால் புனிதமாக கருதப்படும் கோவிலை பாலியல் குற்றங்களுக்காக பயன்படுத்தி வருவது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translation: Newsu

Courtesy: India.com, Times of India