தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக எம்.பி அன்வர் ராஜா தேர்வு!

2011ம் ஆண்டு வக்பு வாரிய தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் பதவிகாலம் 2015-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கு உறுப்பினர்கள் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். தமிழ் மகன் உசேன், அன்வர்ராஜா எம்பி, மஸ்தான் (திமுக எம்எல்ஏ), அபுபக்கர் எம்எல்ஏ, பாத்திமா முசப்பர் என 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், வக்பு வாரிய தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக வாரியத்திற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படாமல் தேர்தல் தொடர்ந்து தள்ளி போடப்பட்ட நிலையில், இன்றைய தினம் காலை 10 மணிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, 11 உறுப்பினர்களும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்கும் பொருட்டு ஏராளமான போலீசார் வக்புவாரிய அமைந்துள்ள மண்ணடி பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

காலை 9.30 மணியிருந்த உறுப்பினர் ஒருவர் பின் ஒ ருவராக வர தொடங்கினர். இதை தொடர்ந்து வக்புவாரிய தேர்தல் நடத்தப்பட்டது. இதில் போட்டியின்றி அன்வர்ராஜா எம்பி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்த தமிழ் மகன் உசேன் இந்த தேர்தலை புறக்கணித்தார்.

Close