Adirai pirai
islam இந்தியா

IAS, IPS அதிகாரிகளை தீர்மாணிக்கும் UPSC தேர்வில் 51 முஸ்லிம் மாணவர்கள் வெற்றி

நாடு முழுவதும் நடைபெற்ற UPSC எனப்படும் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் 4,56,625 பேர் தேர்வு எழுதினர். நாட்டின் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை தீர்மாணிக்கும் இந்த தேர்வில் 13 ஆயிரத்து 666 பேர் மட்டுமே தேர்வில் தகுதி பெற்றனர். இதில் நேர்முக தேர்விற்கு 2568 பேர் மட்டுமே முன்னேறி  இறுதியாக அதில், 990 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த 990 பேரில் 51 பேர் முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர். அதிலும் முதல் நூறு இடங்களில்  சாத் மியா கான் 25-வது இடத்திலும், பைசூல் ஹசீப் 36-வது இடத்திலும், ஜமீல் பாத்திமா 62-வது இடத்திலும், ஹஸீன் ஜாகிரா ரிஸ்வி 87-வது இடத்திலும், அசார் ஜியா 97-வது இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனர்.

அரசாங்க தேர்வு எழுதினால் முஸ்லீம் என்ற அடிப்படையில் புறக்கணிக்கபடுவோம் என்ற எண்ணம் இந்திய முஸ்லிம்களின் மனதில், நீண்ட காலமாக இருந்து வருகிறது.  இதன் காரணமாக பெரும்பான்மையோர் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இந்த நிலைமை உண்மையென்றாலும் அதையும் தாண்டி சாதித்து காட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாக 51 முஸ்லீம் மாணவர்கள் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.