Adirai pirai
Crime உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே இருவர் வெட்டி படுகொலை… 144 உத்தரவு அமல்!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மஞ்சவயல் கிராமத்தில் உள்ள இருவேறு சமூகங்களுக்கு இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாத சுடுகாட்டு பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில நேற்று (30.04.2018) இரவு முருகன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவின் போது இதன் காரணமாக இரண்டு சமூகத்துக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஒரு சமூகத்தை சேர்ந்த 2 பிரதீப், சிவநேசன் ஆகிய இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். விமலாதி, சண்முக சுந்தரம், வீரபாகு, ராஜேஷ் ஆகியோர் படுகாயமடைந்துள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் படுகொலை காரணமாக சுற்றுவட்டார கிராமங்கள் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. மேலும் கலவரத்தை தவிர்க்க 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த படுகொலைக்கும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது இது போன்ற சாதி வன்முறைக்கு உந்துகோளாக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.