Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது போலீஸ் முன் கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல்!

https://youtu.be/rteBijB2A5w

மஞ்சவயல் கிராமத்தில் நடந்த இரு சமூகத்தினர் மோதலில் இருவர் கொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்த பிறகு இன்று அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் பட்டுக்கோட்டை ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ஆம்புலன்ஸ் வேகமாக இயக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த துவரங்குறிச்சியை சேர்ந்த இறந்தவரின் உறவினர்கள் 5 க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி முன்னிலையில் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனரான பட்டுக்கோட்டையை சேர்ந்த தமுமுக நகர செயலாளர் ராஜா முஹம்மது (30) மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தி உள்ளனர்.

உதவிக்காக பட்டுக்கோட்டை காவல் துறையினரை தமுமுக அழைக்க அவர்கள் தாக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனகூறப்படுகிறது. தாக்கப்பட்ட ராஜா முஹம்மது அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கியவர்கள் மீது காவல் துறை துரித நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் பட்டுக்கோட்டையில் அளவிற்கு மாபெரும் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமுமுக எச்சரித்துள்ளது.