Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சியால் கைவிடப்பட்ட வீரணார் கோவில் தெரு!

அதிரை பழஞ்செட்டித்தெரு அருகே உள்ளது வீரணார் கோவில் தெரு. இங்கு முறையான குப்பை கொட்டும் தொட்டிகள் இல்லாத காராணத்தால் ஒரு பகுதியிலேயே மக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அந்த குப்பைகளையும் பேரூராட்சி அதிகாரிகள் முறையாக அல்லாத காரணத்தால், அங்கு துர்நாற்றம் வீசி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சியில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல சமயங்களிலும் இந்த குப்பை மேட்டை சிலர் கொளுத்திவிட்டு சென்றுவிடுவதால் அப்பகுதியில் புகைமூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் பிரச்சனைகளுக் ஏற்படுகின்றன.

இது குறித்து பேரூராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.