Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக தொடங்கிய பைத்துல்மாலின் திருக்குர்ஆன் மாநாடு!

அதிரை பைத்துல்மாலின் 15 வது திருக்குர்ஆன் மாநாடு நேற்று மாலை ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி அருகாமையில் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளான நேற்றைய நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்ற வழக்கறிஞர் அப்துல் ரஜ்ஜாக் அவர்கள் பைத்துல்மாலின் வெள்ளிவிழா மலரை வெளியிட்டார்கள். இதை இமாம் ஷாபி பள்ளி தாளாளர் எம்.எஸ்.தாஜுத்தீன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதில் ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி பேரா.ஷறபுத்தீன் முஸ்பாஹி, சென்னை பாலவாக்கம் ஜாமிஆ பள்ளி தலைமை இமாம் அபுதாஹிர் பாஜிப் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக பைத்துல்மால் துணை தலைவர் SKM.ஹாஜா முகைதீன் அவர்கள் வரவேற்புரையுடன் தொடங்கிய முதல் நாள் நிகழ்ச்சி, இணைசெயலாளர் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் நன்றிரையுடன் முடிவடைந்தது.