Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கிராஅத் போட்டியில் முதல் பரிசை பெற்ற அதிரை இளைஞர் ஜாபிர்!

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கிராஅத் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல ஊர்களை சேர்ந்த திறமையான ஹாஃபிழ்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

இதில் அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த சேஹன்னா ஆலிம் அவர்களின் மகன் ஜாபிர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பாக இனிய குரலில் கிராஅத் ஓதி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து முதல் பரிசை தட்டிசென்றார்.

அதுமட்டுமின்றிஇவர் இதற்கு முன் அதிரையிலும், பிற ஊர்களிலும் நடந்த கிராஅத் போட்டிகளிலும் கலந்துக்கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.