Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணாஜிபட்டினத்தில் பதற்றம்! SDPI பிரமுகருக்கு அறிவாள் வெட்டு… காவி கும்பல் வெறிச்செயல்!

அதிரை, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம் அருகேயுள்ள கிருஷ்ணாஜிபட்டினத்தில் அனைத்து மத சகோதரர்களும் ஒற்றுமையாக இருந்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக காவி கும்பல் இஸ்லாமியர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்து ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்து வந்தது. இதனால் அங்கு கடந்த மாதங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று P.R.பட்டினத்தை சேர்ந்த SDPI பிரமுகரான செய்யது என்பவரை சுற்று வளைத்த காவி கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதையைடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் மணல்மேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து ஈசிஆர் மார்க்கமாக உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து காவி சிந்தனை கொண்ட நபர்கள் கிருஷ்ணாஜிபட்டினத்தில் கலவரம் செய்யும்நோக்கத்துடன் குவிந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேனி, கிருஷ்ணாஜிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்துத்துவா கும்பல் கலவரம் செய்யும் நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. இந்த சதியை உடைக்க நடுநிலைவாதிகள், இந்து, கிருஸ்தவ மத சகோதரர்கள் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு துணை நின்று சமத்துவத்தை பேணிக்காக்க வேண்டும்.