Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணாஜிபட்டினத்தில் செய்யதுக்கு நடந்தது என்ன? இந்து முன்னணியின் கோர முகம்!

அதிரை, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம் அருகேயுள்ள கிருஷ்ணாஜிபட்டினத்தில் அனைத்து மத சகோதரர்களும் ஒற்றுமையாக இருந்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக காவி கும்பல் இஸ்லாமியர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்து ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்து வந்தது. இதனால் அங்கு கடந்த மாதங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று P.R.பட்டினத்தை சேர்ந்த SDPI பிரமுகரான செய்யது என்பவரை சுற்று வளைத்த காவி கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இந்த தாக்குதலில் வெட்டுபட்டு பலத்த காயமடைந்த செய்யது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது மருத்துவமனை,செய்யது அவர்களின் மனைவி என அனைவரையும் 25 பேர் கொண்ட இந்து முண்ணனி அமைப்பினர் தாக்கியுள்ளனர்.

SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அதிரை நிஜாம்,சட்டக்கல்லூரி மாணவர் ஹவாஜா,புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சாலிஹ் மரைக்காயர், மாவட்ட பொதுச்செயலாளர் சரபுதீன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மெடிக்கல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து வழக்கறிஞர் அதிரை நிஜாம் தெரிவிக்கையில், எங்களுடைய போராட்டம், ஜனநாயக ரீதியாக தொடரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராடுவோம் மேலும் அவர் கூறுகையில் கலவரங்களை ஏற்படுத்தும் வண்ணம் நடத்தப்பட்ட தாக்குதலை அரங்கேற்றியவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேனி, கிருஷ்ணாஜிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்துத்துவா கும்பல் கலவரம் செய்யும் நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. இந்த சதியை உடைக்க நடுநிலைவாதிகள், இந்து, கிருஸ்தவ மத சகோதரர்கள் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு துணை நின்று சமத்துவத்தை பேணிக்காக்க வேண்டும்.