Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் ரயில் நிலைய பணிகளை ஆய்வு செய்த பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர்!

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று 10.05.2018 மதியம் அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்டனர்.பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் செயலாளர் வ. விவேகானந்தம், செயற்குழு உறுப்பினர்கள் டி. பாலசுப்பிரமணியன், சுப்பிரமணி, உறுப்பினர்கள் சங்கர், எம்.எப்.முஹம்மது சலீம் ஆகியோர் பார்வையிட்டு, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் மரக்கன்றுகள் நட்டுபராமரித்தல் பற்றி ஆலோசனை நடத்தினர்.