Adirai pirai
islam

கோவையில் சிறையில் 20 ஆண்டுகளாக வாடி வரும் அபுதாஹிரின் உயிர் காப்போம்!

20 ஆண்டுகளுக்கு மேலாக வெறும் விசாரனை கைதியாக மட்டும் தனது 19 வயதில் சிறை சென்ற சகோ அபுதாஹிர் நிலைமை படும் மோசமாக உள்ளது. பார்வை இழந்தவராய் இரு கிட்னியும் செயல் இழந்தவராய் இன்னும் பல அறிய வகை நோய்களினால் பாதிக்கப்பட்டு இருக்கும் நமது சகோதரர் கோவை அபுதாஹிருக்கு உதவிடுவீர். இவருக்கு மனைவி மக்களோ இல்லை, இவரது குடும்பம் மிகவும் சிரமத்தில் தான் இவரது சிகிச்சைக்கும் செலவிடுகிறது. ஒரு மாதத்திற்கு சுமார் 8 தடவை வாரத்திற்கு குறைந்தது 2 தடவையாவது டையாலிசிஸ் செய்து ஆக வேண்டும். மிகவும் வறுமையில் இருக்கும் இவரது சிகிச்சைக்கு உதவிடுவீர்..

சிறை வாசம் அனுபவித்தது வரும் இவருக்கு விரைவில் விடுதலையும் உயிர் இருக்கும் சில நாட்களாவது தனது குடும்பத்தோடு இருக்க அல்லாஹ் உதவி புரிய வேண்டும் என துஆ செய்யுங்கள்.

தமுமுக மாநில பொதுக்குழுவில் தலைமை அறிவித்தலின் பேரில் நாளை அதிரை இருக்கும் அனைத்து ஜும்மாவிழும் தமுமுக சகோதரர்கள் கோவை அபுதாஹிருகாக வசூல் செய்கிறார்கள். உங்களால் முடிந்த அளவில் உதவி செய்திடுங்கள்.