Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக 3 இடங்களில் புதிய குப்பை கூண்டுகள் அர்ப்பணிப்பு!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக ஊரின் பல இடங்களில் இரும்பு குப்பை கூண்டுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சி.எம்.பி லேன், அதிரை போஸ்ட் ஆபிஸ் தெரு, ஆலடித்தெரு, ஏஜே நகர் , பிலால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை அதிரை நாரக்குட்டை, புது ஆலடித்தெரு, ஏ.எல்.பள்ளி ஆகிய இடங்களில் 3 இரும்பு குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி குப்பை வேறெங்கும் கொட்டாமல் சுகாதாரம் காக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுகொள்கிறோம்.