Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஒரே நாளில் 2 பள்ளிவாசல்கள் திறப்பு!

மஸ்ஜித் அல்-ஹிதாயா

நேற்றைய தினம் (11.05.2018) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-3ன் சார்பாக மேலத்தெரு சாணாவயலில் அல் ஹிதாயா என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் தொடங்கப்பட்டது. இதில் சபீர் MISC அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

படங்கள் கீழே:

மஸ்ஜித் ஆயிஷா(ரலி)

அதே போல், அதிரை செட்டித்தெருவில் புதிதாக மஸ்ஜித் ஆயிஷா(ரலி) என்ற பெயரில் புதிதாக பள்ளிவாசல் கட்டப்பட்டு நேற்று அசர் தொழுகையின் போது திறப்பு விழா நடைபெற்றது. இதில் உலமாக்கள், ஊர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.