Adirai pirai
உள்ளூர் செய்திகள் தமிழகம்

பட்டுக்கோட்டை சாலையில் விபத்து… 5 பேர் மரணம்!

தஞ்சை மேலவஸ்தவாசாவடி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் அவரது கார் வந்தபோது, சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விஜயகுமார், ஓட்டுநர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் 3பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.