அதிரையில் தாருத் தவ்ஹீத் நடத்தும் ரமலான் மாத சிறப்பு பயான் நிகழ்ச்சி!

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதம் முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரமலான் மாதம் முழுவதும் ஆண்களுக்கு நடுத்தெரு EPMS பள்ளி எதிரில் சிறப்பு பயான் நிகழ்ச்சி இன்று இரவு 10 மணியளவில் நடைபெறவுள்ளது. அதே போல் பெண்களுக்கு பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் காலை 11 மணிக்கு பயான் நடைபெறவுள்ளது

இதில் மௌலவி ஹுசைன் மன்பயீ கலந்துகொண்டு மார்க்க உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த 20 நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Close