“நான் புகை பிடிப்பதை விட்ட கதை” – விளக்கும் அதிரை வஜீர் அலி

புகையெனும் பகைவன், எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவமிது.

நான் பள்ளிப்பருவத்திலேயே புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பகாலத்தில் மிகமிக இன்பமாகவும் விலையுயர்ந்த சிகெரெட் GOLD FLAKE & MARLBORO புகைப்பதால் மட்டற்ற மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் MARLBORO (20 சிகெரெட்கள்) மிகச் சாதாரணமாக புகைத்தேன் வீட்டில் அனைவருக்கும் தெரியவந்தும் யாரும் என்னைக் கண்டிக்கவில்லை அவ்வளவு செல்லமாக வளர்ந்தேன்.

காலச்சக்கரம் மிகவேகமாக சுழன்றது நல்ல ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ்ந்துவந்த எனதன்பு தந்தை நோய்வாய்ப்பட்டார்கள் காரணம் இந்த உயிர்க்கொல்லி சிகெரெட் தான் என்று கண்டறியப்பட்டது மருத்துவ சோதனையில்.

எத்தனை எத்தனையோ மருத்துமனைகளுக்கு அழைத்துச் சென்றோம் யாதொரு பலனுமில்லை எனதன்பு தந்தை அவர்கள் மரணப்படுக்கையில் இருப்பதை நன்குணர்ந்தார்கள் என்னிடம் முதலும் கடைசியுமாக வினவினார்கள் எனதருமை மகனே இந்த உயிர்க்கொல்லி பழக்கமான புகைபிடிப்பதை நிறுத்திவிடு என்றார்கள்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதில் உடன்பட்ட நான் அன்றே புகைபிடிப்பதை நிறுத்திவிட்டேன் அன்றிலிருந்து ஒன்பதாவது நாள் எனதன்பு தந்தை இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள்.

புகைபிடிப்பவர்களுக்கு எனது கனிவான வேண்டுகோள் இந்த புகைபழக்கம் தான் உடலில் உருவாகும் அத்தனை நோய்களுக்கும் காரணமாக விளங்குகிறது புகையெனும் பகைவனை விட்டொழித்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.

ஆக்கம் : வஜிர் அலி

Close