Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ஜித்தாவில் அதிரை அய்டா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்ற அதிரையர்கள்!

எல்லா வருடங்கள் போல் இவ்வருடமும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஜித்தா ஷரஃபியா லக்கி தர்பார் உணவகத்தில் நமது அய்டா-AYDA (Adirai Youth Development Association, Jeddah) அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தேறியுள்ளது. இதில் ஜித்தா வாழ் அதிரையினர்கள் அனைவரும் குடும்பத்துடன் ,இளைஞர்கள் , மாணவர்கள் ,சிறுவர் & சிறுமியர்கள் உட்ப நூற்று ஐம்பதுக்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்து தந்தனர். இதில் உறுப்பினர் சேர்க்கை, ஃபித்ரா வசூல் போன்ற நற்பணிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சி நிரல் –

கிராத் :

மாணவன். அப்துல் பாசித் அப்துல் அஜீஸ்

வரவேற்பு & தலைமை உரை :

ஹபீப் ரஹ்மான்

ஆண்டு அறிக்கை மற்றும் செயல்பாடுகள்:

முனாஸ்கான்

சிறப்பு கலந்துரையாடல் :

மருத்துவர். அஜ்மல்

நன்றியுரை

அப்துல் அஜீஸ்

நிகழ்ச்சி தொகுப்பு :

தாஜுதீன்