Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மின் மோட்டார்கள் பறிமுதல் தொடர்பாக அல் அமீன் பள்ளியில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டம்!

அதிரையில் பேரூராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீர் பைப் லைன் மேடு பள்ளமாக இருப்பதால் பல தெருக்களுக்கும், கரையூர் தெரு, கடற்கரைத்தெரு, MSM நகர், பழஞ்செட்டுத்தெரு போன்ற பகுதிகளுக்கு முறையாக செல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த மின் மோட்டார்களை கைப்பற்ற அதிகாரிகள் அதிரைக்கு வந்தனர். ஆனால், அதிரை காவல்நிலையம் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் அனைத்து முஹல்லாவாசிகள் மற்றும் கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு அன்றைய தினம் அதிகாரிகள் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஊரின் முக்கிய பிரச்சனைகளை அனைத்து ஜமாஅத் மற்று பஞ்சாயத்துகள் ஒன்றுகூடி எதிர்ப்பதற்காக அதிரை சமூக நல கூட்டியக்கம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிரையில் உள்ள மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய பட்டுக்கோட்டையிலிருந்து அதிகாரிகள் வந்திருந்தனர். இதனை அறிந்த அதிரை சமூக நல கூட்டியக்க நிர்வாகிகள், ஊர் மக்கள் ஒன்று கூடி பேரூராட்சி தரப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி மனு எழுதி செயல் அலுவலரிடம் வழங்கினர். இதனை அடுத்து தற்காளிகமாக அதிரையில் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்வது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் வீடுகளில் உள்ள மின் மோட்டார்களை அகற்ற அதிகாரிகள் வரலாம் என்பதால், அதனை தடுக்கும் வகையில் இன்று காலை அதிரை அல் அமீன் பள்ளியில் அதிரை சமூக நலக்கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் இஸ்ஹாக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மின் மோட்டர்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகளின் நடவடிக்கைக்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், நாளை அனைத்து சமூக, கிராம, முஹல்லா நிர்வாகிகளும் ஒன்று திரண்டு பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரை காலை 9 மணியளவில் சந்தித்து இது குறித்த வலியுறுத்துவது எனவும், அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களை சந்தித்து மனு கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

உங்கள் வீடுகளில் மின் மோட்டார்களஒ பறிமுதல் செய்ய யாரேனும் வருகை தந்தால் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அதிரை சமூக நல கூட்டியக்கம்: +91 99444 99366, +91 94438 63006, +91 99762 38137