Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டை – காரைக்குடி ரயில் சேவையை தொடங்க எச்.ராஜாவிடம் கோரிக்கை!

இன்று 20.05.2018 மதியம் காரைக்குடியில் அகில இந்திய ரயில் பயணிகள் நல சங்க அமைப்பின் தலைவர் எச்.ராஜாவை பட்டுக்கோட்டை வட்ட இரயில் நல பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் செயலாளர் வ. விவேகானந்தம் துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன், உறுப்பினர் தி.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்து காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையே ரயில் சேவையை உடனடியாக துவங்க வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர். விரைவில் இரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்