Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மேலும் ஒரு உயிரை பறித்த டாஸ்மாக் கடை!

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மதுக்கடை அருகே சில நாட்களாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த மது கடையில் ஆறுமுகம் என்ற நபர் மது வாங்கிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஜேசிபி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஜேசிபி ஓட்டுனரை கைது செய்து அதிரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கியமான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் இதுவரை பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.