Adirai pirai
islam Uncategorised Uncategorized

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமில் மீண்டும் க்ரேன் விபத்து!

மக்காவில் உள்ள புனித மஸ்ஜித் அல் ஹரமில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக க்ரேன் விழுந்த விபத்தில் நூற்றுக்கணக்கான ஹாஜிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஹரம் மஸ்ஜிதில் மீண்டும் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த சிறிய க்ரேன் விழுந்ததில் அதன் ஓட்டுனர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் மக்கள் கூட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக க்ரேன் அங்கிருந்து அகற்றப்பட்டது.