Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை மோட்டார் விவகாரம்… MLA வை சந்தித்து சமூக நல கூட்டியக்கத்தினர் மனு!

அதிரையில் பேரூராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீர் பைப் லைன் மேடு பள்ளமாக இருப்பதால் பல தெருக்களுக்கும், கரையூர் தெரு, கடற்கரைத்தெரு, MSM நகர், பழஞ்செட்டுத்தெரு போன்ற பகுதிகளுக்கு முறையாக செல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த மின் மோட்டார்களை கைப்பற்ற அதிகாரிகள் அதிரைக்கு வந்தனர். ஆனால், அதிரை காவல்நிலையம் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் அனைத்து முஹல்லாவாசிகள் மற்றும் கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு அன்றைய தினம் அதிகாரிகள் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஊரின் முக்கிய பிரச்சனைகளை அனைத்து ஜமாஅத் மற்று பஞ்சாயத்துகள் ஒன்றுகூடி எதிர்ப்பதற்காக அதிரை சமூக நல கூட்டியக்கம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிரையில் உள்ள மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய பட்டுக்கோட்டையிலிருந்து அதிகாரிகள் வந்திருந்தனர். இதனை அறிந்த அதிரை சமூக நல கூட்டியக்க நிர்வாகிகள், ஊர் மக்கள் ஒன்று கூடி பேரூராட்சி தரப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி மனு எழுதி செயல் அலுவலரிடம் வழங்கினர். இதனை அடுத்து தற்காளிகமாக அதிரையில் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்வது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் வீடுகளில் உள்ள மின் மோட்டார்களை அகற்ற அதிகாரிகள் வரலாம் என்பதால், அதனை தடுக்கும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அதிரை அல் அமீன் பள்ளியில் அதிரை சமூக நலக்கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் இஸ்ஹாக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இன்று அதிரை சமூக நலக்கூட்டியக்கத்தினர் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி.சேகரைஇஸ்ஹாக் அவர்களின் தலைமையில் நேரில் சென்று சந்தித்தனர். அதில், ஊரில் நிலவும் தண்ணீர் பிரச்சனைகள் குறித்து சமூக நலக்கூட்டியக்க உறுப்பினர் பொன்னம்பலம் எம்.எல்.ஏ விடம் விளக்கி கூறினார். அனைத்தையும் கேட்ட எம்.எல்.ஏ அதிரைக்கு அடிக்கடி தான் வருகை தந்துகொண்டிருப்பதாகவும், அதிரையை முக்கிய நகரமாக்குமு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மின் மோட்டார்கள், தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் அதில் தான் கலந்துகொண்டு ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றார்.

இந்த சந்திப்பு கூட்டியக்கத்தை சேர்ந்த A.M.Y.அன்சர்கான், மரைக்கா K. இத்ரீஸ், N.U.சாகுல் ஹமீது, குலாப்ஜான் அன்சாரி ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது.