Adirai pirai
உள்ளூர் செய்திகள்

நோன்பு கஞ்சி அரிசி விசயத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்திய அமைச்சர் செல்லூர் ராஜு!

ரமலான் நோன்பிற்காக அரேபிய நாடுகளில் கூட இலவச அரிசி வழங்குவது கிடையாது. தமிழகத்தில் மட்டும் தான் அரசு சார்பில் வழங்கப்படுகிறது என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிவாசல்களுக்கு அரசி வழங்குவதில் அரசு பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு இலவச அரிசி சென்றடைவதே இல்லை. இந்த நிலையில், இஸ்லாமியர்கள் ஏதோ அரசிக்கு அலைந்து திரிவது போலும், இவர்கள் ஏதோ மகா வள்ளல் போலும் பேசி இருப்பது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.